கிளிநொச்சி திருவையாறு 3ஆம் கட்டைப் பகுதியில் இளைஞர் ஒருவரை கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே இளைஞனைக் கைதுசெய்துள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் திருவையாறு பகுதியிலுள்ள தனது சகோதரன் வீட்டில் தங்கியிருந்தபோதே திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் எங்கு கொண்டு செல்லப்பட்டார்? எதற்காக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை எந்தவிதத் தகவல்களும் வெளியிடப்பட வில்லையென இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.