உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள புதிய சட்டம் தேவை – சிறிலங்கா இராணுவம் கோருகிறது

உள்நாட்டுப் போர்களை எதிர்கொள்வதற்கு தனியான- சொந்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா இராணுவம் கோரியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவம் இன்று சமர்ப்பித்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள மனிதாபிமானச் சட்டங்கள் நாடுகளுக்குப் பொருத்தமானதே தவிர, தீவிரவாத அமைப்புகளுக்கு பொருத்தமுடையது அல்ல என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இழைத்த போர்க்குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே சிறிலங்கா இராணுவம் இவ்வாறு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.