விந்தை உலகம்

அமெரிக்க விலங்குகள் பூங்காவில் ஐபேடில் கேம்ஸ் ஆடும் குரங்குகள்

அமெரிக்க தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள மனித குரங்குகளுக்கு ஐபேட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து மனித குரங்குகள் பாட்டு கேட்கின்றன. ஓவியம்  வரைகின்றன. உற்சாகமாக கேம்ஸ் விளையாடுகின்றன. அமெரிக்காவின் தேசிய வனவிலங்கு பூங்காவில் ஏராளமான அரிய விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. பூங்கா பராமரிப்பாளர் ஸ்மித்சோனியன் கூறியதாவது: நாளுக்கு நாள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப பூங்காவில் உள்ள விலங்குகளின் வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே விலங்குகளுக்கு வித்தியாசமான  உணவுகளை கொடுத்துள்ளோம். விளையாட்டு பொருட்களை மாற்றி உள்ளோம். பார்வையாளர்களுடனான தொடர்பிலும் புதுமைகளை புகுத்தி உள்ளோம். இப்போது ஐபேட்  வழங்கி உள்ளோம். அவற்றின் மூலம் கேம் விளையாடுவது, ஓவியங்கள் வரைவது, பாட்டு கேட் பது என மனித குரங்குகள் உற்சாகமாக உள்ளன. ஐபேட்களில் கேம்ஸ் உள்பட 10 விதமான அப்ளிகேஷன்களை பயன்படுத்த மனித குரங்குகள் கற்றுக் கொண்டுள்ளன. இந்த பூங்காவில் உள்ள உராங்குட்டான்கள் டிரம்ஸ்,  பியானோ போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *