குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் ஞாபக மறதி என்பது இயல்பான விஷயமாகும். ஆனால் சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் மறதி, ஏதாவதொன்றை நினைத்து குழம்பிக் கொண்டே என்ன செய்ய வேண்டும் என்பதே மறந்து விடுவார்கள்.
பெரியவர்களுக்கு சொல்லவே தேவையில்லை…. 50 வயதுக்கு மேல் எந்த பொருளை எங்கே வைத்தோம் என்றே தெரியாமல் தேடி கொண்டே
பொழுதை கழிப்பார்கள்……அட என்னடா? அதுக்கு என்ன தான் வழி என்று தானே கேட்கிறிங்க?
முத்ரா பயிற்சிதாங்க…..நாம் எல்லோராலும் சுலபமாக செய்யக் கூடிய பயிற்சி இது. முத்ரா பயிற்சியானது மின்காந்த அலைகளை உடலில் ஏற்படுத்தி உடலில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. முத்ரா பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம்.
ஞான முத்ரா பயிற்சி செய்யும் முறை: பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையத்தைப் போல செய்யுங்கள். மற்ற மூன்று விரல்களையும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இதுவே ஞான முத்ரா நிலையாகும்.
இந்த முத்ரா பயிற்சியானது மன அமைதியையும், ஞாபக சக்தியையும் அதிகப்படுத்தும். தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் இந்த முத்ரா பயிற்சி தொடர்ந்து செய்து வர நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம். மன அழுத்தம், கோபம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது.








