வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா-2016 பருத்தித்துறை பிரதேச செயலர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் இன்று(28.10.2016 – காலை 9 மணி) திக்கம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வழாவில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
