வல்வை விளையாட்டு கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்ட தொடரின் காலிறுதியாட்டத்தில் மோதியது வல்வை அணி எதிர் யங்கம்பன்ஸ் அணி
யங்கம்பன்ஸ் அணி வீரர் யோகானந்தனின் அதிரடி கோல்களால் இறுதியாட்ட வாய்ப்பை இழந்தது வல்வை_அணி!
நேற்று (05/11/2016) இடம் பெற்ற வல்வை விளையாட்டு கழகம் நடாத்தும் அமரர் யோகசந்திரன் அவர்கள் (முன்னாள் அதிபர் சிதம்பராக் கல்லூரி) ஞாபகார்த்த 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்தாட்ட தொடரின் காலிறுதியாட்டத்தில் மோதியது வல்வை அணி எதிர் யங்கம்பன்ஸ் அணி
முதல் பாதியாட்டத்தில் 02:00 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை வகித்தது யங்கம்பன்ஸ் அணி யோகானந்தன் அநுரா காந்தன் தலா ஒவ்வொரு கோல் பெற்றுக் கொடுத்தனர் இரண்டாவது பாதியாட்டத்திலும் யோகானந்தன் அசத்தல் மேலும் ஒரு கோல் போட்டார் பதிலுக்கு வல்வை அணி வீரர் அணியின் முதல் கோலை பதிவு செய்ய மீண்டும் யோகானந்தன் தொடர் கோல்களை பெற்றுக் கொடுத்தார் வல்வை அணி வீரர் அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்ய இறுதியாட்ட நேர முடிவில் 06:02 என்ற ரீதியில் வல்வை அணியை வீழ்த்தி அரைஇறுதியில் யங்கம்பன்ஸ் அணி
யங்கம்பன்ஸ் அணி வீரர் யோகானந்தன் 05 கோல்கள் தன் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இடம்……யங்கம்பன்ஸ் விளையாட்டு கழக மைதானம்















