உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆசிரியர் கி.செல்லத்துரைக்கு முத்தமிழ் வித்தகர் விருது

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆசிரியர் கி.செல்லத்துரைக்கு முத்தமிழ் வித்தகர் விருது

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆசிரியர் கி.செல்லத்துரைக்கு முத்தமிழ் வித்தகர் விருது
நேற்று சனிக்கிழமை 05.06.11.2016 சனி, ஞாயிறு இரு தினங்களும் டென்மார்க் வயன் நகரில் உள்ள உஸ்ர ஸ்கூல் பாடசாலையில் உலகத்தமிழ் பண்பாட்டு அமைப்பினர் நடத்திய இரண்டு நாட்களுக்கான பெருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு இலங்கையில் இருந்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
மேலும் மலேசியாவில் இருந்து உலகத்தமிழ் பண்பாட்டு அமைப்பு தலைவர், கனடாவிலிருந்து பேராசிரியர் இராஜரத்தினம், பேராசிரியர், விஞ்ஞானி உதயாகரன் துரைசாமி கனடா, ஜேர்மனியில் இருந்து தமிழர் தொன்மங்களை ஆய்வு செய்யும் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் சுபாஷினி, அம்பலத்தாடிகள் இளைய பத்மநாதன் உட்பட உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் பேராளர்களும் கலைஞர்களும் வந்திருந்தார்கள்.
சிறப்பு உரைகள், புத்தகக்கண்காட்சி, ஒளிப்பட நிகழ்வு, கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
சனிக்கிழமை பகல் 10.00 மணிக்கு பேராளர் மாநாட்டுடன் ஆரம்பித்து ஞாயிறு பிற்பகல்வரை நிகழ்வு தொடர்ந்தது.
அத்தருணம் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு அரும்பணியாற்றியமைக்காக ஆசிரியர் கி.செல்லத்துரைக்கு முத்தமிழ் வித்தகர் என்ற சிறப்பு விருதை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க பேராளர்கள் வழங்கினார்கள்.
மேலும் இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் நிலக்கிளி அ. பாலமனோகரன், நெல்லியடி அம்பலத்தாடிகள் புகழ் இளையபத்மநாதன், டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர் ரோல்ஸ் ராவன், நாட்டுப்புற இலக்கியத்திற்காக பேராசிரியர் பாலசுகுமாரன், பேராசிரியர் விஞ்ஞானி உதயாகரன் துரைசாமி கனடா, தமிழ் ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி ஜேர்மனி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
இந்தச் சிறப்பு வல்வைக்கு கிடைத்த சிறப்பென்றும், வல்வை மண்ணுக்கு சமர்ப்பிப்பதில் பெருமை காண்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.