மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் மின்னொளியிலான இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று இரவு 8-00 மணியளவில் கழக மைதானத்தில் கழகத்தலைவர் த -வேணுகானன் தலைமையில் நடைபெற்றது
,இந் நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியத்தலைவர் திரு -ராதாகிருஸ்ணன் தனது தயார் அமரா் சி- சரஸ்வதி ஞாபகத்தமான நடைபெற்ற மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற கொக்குவில் ஏ பி அணிக்கான ரூபா -25,000 பணப்பரிசு ,வெற்றிக்கேடயத்தையும் , இரண்டாவது இடத்தை பெற்ற கொம்மந்தறை இளைஞர் அணிக்கான ரூபா 10,000 பணப்பரிசு வெற்றிக்கேடயத்தையும் வழங்கிகௌரவித்தார்
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா மின்னொளியிலான உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இளவளை யங்கென்றீஸ் அணிக்கான ரூபா -30,000 மற்றும் வெற்றிக்கேடயத்தை வழங்கிகௌரவித்தார்
இந் நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்ட கரவெட்டி பிரதேச செயலர் திரு-எஸ் -சிவசிறி மினனொயிலான உதைப்பந்தாட்டபோட்டியில் இரண்டாவது இடத்தைபெற்ற ஊரேழு றோயல் அணிக்கான ரூபா -10,000 மற்றும்வெற்றிக்கேடயத்தை வழக்கிகௌரவித்தார்