உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு வல்வை நகரசபையால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி
உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு வல்வை நகரசபையால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி
உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகரசபையினால் வல்வை நகரசபைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி இன்று (10.11.2016) காலை வல்வை முத்துமாரி அம்மன் ஆலய மேற்கு வீதியில் நடைபெற்றது.
வல்வை நகரசபை எல்லைக்குட்பட்ட 8 பாலர் பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி நிகழ்வில் கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பும், இசைவும்அசைவும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் பாலர்களுக்கான ஓட்டம், தடைதாண்டல், நீர்நிரப்புதல், அஞ்சல் ஓட்டம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.








