வணக்கம்,
வல்வை 73 குடும்பத்தவர்கள் அனைவர்க்கும் …….
மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் நான்காவது வல்வை73 ஒன்று கூடல் நெருங்கி விட்டது. Christmas Eve அன்று நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த மண்ணிலே ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாகவிருந்து எமது பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவித்து ஒரு சிறந்த சமுதாயமாக மிளிர வேண்டும்.
இவ்வாண்டு மேடை நிகழ்ச்சிகளை தவிர்த்து, ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் கூட்டாக இணைத்து எல்லோருடைய பங்களிப்புகளுடனும் நிகழ்ச்சிகள் யாவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
🌟அத்தோடு எம் நண்பர் பாலசேகரின் மனைவியார் திருமதி சுகன்யா அவர்களால் எழுதப்பட்ட “வல்வையின் பாரம்பரிய கலைகள்” எனும் நூல் வெளியீடும் இவ்வாண்டு ஒன்றுகூடலின்போது இடம்பெற உள்ளது. இதற்கான ஒழுங்கமைவுகளை கனடாவிலுள்ள எமது நண்பன் கண்ணன் அவர்கள் ஒருங்கமைத்துள்ளார். இந்நூல் வல்வையின் பாரம்பரிய கலைகளைப்பற்றிய ஒரு சிறப்பாய்வாகும். இந்நூல் எமது கலைகளைப்பற்றிய நுண்ணறிவை கட்டுபக்கோப்பான முறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கமாகும். எம்மவர் திறமைகளையும், ஆக்கங்களை அறிமுகப்படுத்து எமது ஒன்றுகூடலை மேலும் சிறப்பிக்கும்.
🌟
வல்வை73 நண்பர்கள், குழந்தைகள் அனைவரும் வந்து பங்களித்து இவ்வருட ஒன்றுகூடலையும் மேலும் சிறப்புற செய்வோம்…..
இவ்வருட ஒன்றுகூடலுக்கான இடமும் காலமும் பின்வருமாறு;
Date: 24/12/16 (Christmas Eve)
Time: 15:00pm – Midnight
Venue: 52 Benhill Avenue,
Sutton,
Surrey,
SM1 4DP
Dress Code:
Ladies: saree or surithar
Children: suitable party wear for indoor games
Men: shirts and trousers
நன்றி. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வல்வை73
ஒற்றுமையால் மேன்மையடைவோம்…..