பிரேசில் நாட்டின் சாண்டா மரியா நகரில் ‘கிஸ் நைட் கிளப்’ என்ற இரவு விடுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த இரவு விடுதியில் நடந்த இசை கச்சேரியில் நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் விபத்து நடந்த போது சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இரவு விடுதிக்குள் இருந்தனர்.
இவர்களில் பலர் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர்.
இதுவரை 159 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் அதிகம் பேர் உயிர் இழந்திருப்பார்கள் எனவும் தெரிகிறது.
அனேகமாக, பலி எண்ணிக்கை 200ஐ தாண்டலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மேஜர் ஜெர்சன் டா ரோசா பெனரரா கூறியுள்ளார்.