இலங்கைக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானமொன்றை நிறைவேற்ற உள்ளது?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானமொன்றை நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவையின் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமர்வுகளின் போது இலங்கைக்கு கடுமையான நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான தீர்மானங்களை அமெரிக்கா நிறைவேற்ற முயற்சிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.