இறுக்கமான சூழ்நிலையை அவதானிக்க முடிகின்றது: அமெரிக்க இராஜதந்திரிகள்

யாழ்ப்பாணத்தில் தற்போது இறுக்கமானதொரு சூழ்நிலை உருவாகியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் நிலைவரங்கள் தொடர்பில் யாழ். ஆயருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது, நிலைமை ஓரளவுக்கு சுமுகமாகக் காணப்பட்டது. ஆனால் 5 மாதங்களின் பின்னர்  நிலைமை மாற்றமடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.