பிரிட்டனின் பிர்மிங்காமை நகரைச் சேர்ந்த இர்பான் நசீர், இர்பான் காலித் ஆகிய இருவரும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டன் பொலிசார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தகர்த்த நினைவு நாளன்று பிரிட்டனில் தற்கொலை தாக்குதல் நடத்தி ராணுவ வீரர்களை கொல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட இவர்களது கூட்டாளி ஆசிக் அலி கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் இது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இவர்கள் மீது வுல்ரிச் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நடந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா தீவிரவாதிகள் இர்பான் நசீர், இர்பான் காலித் ஆகியோர் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாமில் தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சி பெற்றுள்ளது தெரியவந்தது.
மேலும், அதற்கான உடைகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தற்கொலை தாக்குதல் வீடியோக்களையும் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.