வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 6வது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா வரும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 03.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது.
இக் கலை இலக்கிய விழா வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் தலைமையில் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் (சிரேஸ்ட விரிவுரையாளர், சமூகவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு ஆ.சிவநாதம் (அதிபர் யா/புற்றளை மகாவித்தியாலயம்) அவர்களும், திரு.மாவை. நா.கஜேந்திரன் (முகாமையாளர் – வலம்புரிப் பத்திரிக்கை) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அத்துடன் கலைஞர் கெளரவிற்பும் , அதனைத் தொடர்ந்து நெய்தல் மலர் 7வது இதழ் வெளியீடும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து விருது வழங்கல், கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.
இக்கலை விழாவிற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் அழைக்கின்றார்கள் .















Leave a Reply