இப்பாடசாலை 1880ம் ஆண்டளவில்தற்போது இருக்கும் கொன்றைக்கட்டை பெரிய வீதிக்கருவில் நிறுவப் பெற்றது. முன்னர் அது கொட்டகையாய் இருந்தது. சில காலத்தில் உடுப்பிட்டியிலிருந்து அரியகுட்டி என்னும் ஒருவர் தலைமையாசிரியராக இருந்து பல வருடங்கள் சேவை செய்தார். அவர் பாடசாலையை வளர்த்த கதை பற்றி இப்பொழுதும் சொல்வார்கள் காலையில் வந்தவுடன் பாடசாலைக்கு வராத பிள்ளைகளின் வீடு தேடிச் சென்று பிள்ளைகளைக் கூட்டி வந்து பாடசாலையை வளர்த்தார். கல்வியும் வளர்ந்தது. தற்போது கற் கட்டிடமாகவும் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடசாலையாகவும் இருக்கின்றது. இதை அரியகுட்டி பாடசாலை எனவும் அழைப்பார்.