Search

சருமத்தை பொலிவாக்கும் எலுமிச்சை

எலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், சருமம் மற்றும் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றது.

1. எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

2. செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும் செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.

3. எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

4. குறிப்பாக எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

5. பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

6. எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தை பெறலாம்.

7. எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *