வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி மாத, தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் இன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய வீதியில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் நடன நிகழ்வும் , உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு முன்பள்ளிகளிற்கிடையே நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பாலர் களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.