உளவுத் தகவல்களை திரட்டவே அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்தனர் – விமல்

உளவுத் தகவல்களை திரட்டும் நோக்கிலேயே அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாவின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பிரதான நோக்கம் உளவுத் தகவல்களை திரட்டுவதேயாகும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இலங்கைத் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி அவற்றை சர்வதேச அரங்கில் நாட்டுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர் குலைந்துள்ளதாகவும், இதனால் யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் சர்வதேச ரீதியான அழுத்தங்களை பிரயோகிக்க அமெரிக்க முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு முற்று முழுதாக சீர்குலைந்துள்ளதாக கருதியே பரக் ஒபாமா, தனது மூன்று பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவும், எதிர்க்கட்சிகளும் தமிழ் புலம்பெயர் மக்கள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.