Search

நடனத்தில் தேசியவிருதினைபெற்ற வல்வை மாணவி பிரதீபா இரத்தினஜோதி!!

நடனத்தில் தேசியவிருதினைபெற்ற வல்வை மாணவி பிரதீபா இரத்தினஜோதி!!

06.10.2016 இல் கொழும்பு நெலும்பொக்குனை தாமரைத்தடாகம் அரங்கில் இலங்கை கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட “நாத நதி” இசை நடன நிகழ்வில் (National musical dance poem) சிறப்பாக தனது ஆற்றுகையினை வெளிப்படுத்தி செல்வி. இரத்தினஜோதி பிரதீபா அவர்கள் தேசிய விருதினை பெற்றுள்ளார்.

கடந்த 28.01.2017 அன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கென ஓர் கலாசார மண்டபம் புற்றளையில் கௌரவ கலாசார அமைச்சர் S.B நாவின்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.அவ்விழாவில் பிரதி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ,கலாசார அதிபர் பிரதீபா சேரசிங்க, யாழ் அரச அதிபர் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் பிரதீபா இரத்தினஜோதி அவர்களிற்கு அமைச்சர் S.B நாவின்ன அவர்களினால் இரத்தினஜோதி பிரதீபா அவர்களிற்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நடன ஆசிரியர்களான ஆசிரியர்களான திருமதி.சுபாசினி செபஸ்டியன், திருமதி.மாணிக்கராசா சுமனேஸ்வரி மற்றும் வல்வை மகளிர் மகா வித்தியாலய அதிபர் செல்வி ராஜ்ஜிய லக்சுமி சுப்பரமணிய குருக்கள் மற்றும் பருத்தித்துறை கலாசார உத்தியோகத்தர் திரு.ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் செல்வி பிரதீபா இரத்தினஜோதியின் ஆற்றுகைக்கு நெறிப்படுத்த துனையியிருந்தவர்கள் ஆவார்கள்.

 

 

 




Leave a Reply

Your email address will not be published.