வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் 19.02.2017 நடைபெற்றது
வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் ஆண்டுப்பொதுக்கூட்டம் 19.02.2017 ஞாயிறு மாலை 06.00 மணிக்ககு ஆரம்பமாகியது, 2015ஆம் ஆண்டு ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு பின்னர் 2016ஆம் ஆண்டின் செயற்பாடுகள் மற்றும் கணிக்கறிக்கைகளான சிதம்பரா கணிதப்போட்டி கணக்கறிக்கை, வல்வை நலன்புரிச் சங்க கணக்கறிக்கை என்பன பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கப்பட்டு 2016ஆம் ஆண்டுகணக்கறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தொடர்ந்து பல விடயங்கள் போசப்பட்டன அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தெரிவு இடம் பெற்றது, கடந்த இரண்டுவருடங்களாக திறம்பட வல்வை நலன்புரிச் சங்கத்தினை வழிநடத்திய நிர்வாகத்தினரேயே தொடர்ந்தும் இவ்வருடமும் நிர்வாக பொறுப்பேற்று வழிநடத்துமாறு அனைவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கூட்டத்திற்கு வருகை தந்த அனைவராலும் ஏகமனதாக மீண்டும் 2016ஆம் ஆண்டு நிர்வாகிகளே தெரிவு செய்யப்பட்டதுடன் ஆண்டுப் பொதுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.