பிரிட்டனில் அண்மையில் G8 நாடுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரிட்டனில் தான் இளைஞரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
OECD நாடுகளிடையே ஸ்பெயின், கிரீஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாகத் ஒர்க் ஃபவுண்டேஷன் ( Work Foundation) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்னைக்கு பொருளாதாரச் சரிவை மட்டுமே காரணமாக்க இயலாது. ஏனெனில் பொருளாதாரத்தில் பெரும் சரிவைச் சந்தித்த நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளது.
மேலும் பிரிட்டன் இப்பிரச்னையைத் தீர்க்க ஜேர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளைப் பின்பற்றி வேலைக்கான முன் பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சியை இளைஞர்களுக்கு அளிக்க முன்வர வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியரான லிசி க்ரௌலி(Lizzie Crowley )தெரிவித்துள்ளார்.
இப்போது 15 முதல் 24 வயதினரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் 2008 முதல் 2011 வரை ஆராய்ந்தால் வேலையில்லாதோர் எண்ணிக்கை 9,16,000 ஆக உயர்ந்துள்ளது.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய G8 நாடுகளிடையே வேலைவாய்ப்பின்மை சராசரியாக 15 சதவீதம் மட்டுமே காணப்படுகிறது என்று ஆய்வரிக்கை தெரிவித்துள்ளது.