உலக நாயகன் கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் படம் அமெரிக்கா, பிரிட்டனில் சக்கைப்போடு போடுகிறது.
இந்த இரு நாடுகளிலும் விஸ்வரூபம் படத்துக்கு கடுகளவு எதிர்ப்பு கூட இல்லை.
அமெரிக்காவில் 44 திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 19 திரையரங்குகளில் விஸ்வரூபம் காண்பிக்கப்படுகிறது.
இரு நாடுகளிலும் வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி படம் ரிலீசானது. வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது.
இதனால் எதிர்ப்பார்த்ததை விட விஸ்வரூபம் கூடுதல் வசூலை அள்ளியுள்ளது.
அமெரிக்க திரையரங்குகளில் இதுவரை விஸ்வரூபம் ரூ.3 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பிரிட்டனில் ரூ.81.23 லட்சம் வசூலாகி உள்ளது.
இன்னும் 3 வாரங்களுக்கான டிக்கெட்டுக்கள் இரு நாடுகளிலும் முன்பதிவு செய்யப்பட்டு ஹவுஸ் புல் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.