இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளனையும் ஆக்கிரமிக்கச் சென்றனர் சிங்கள மீனவர்கள் –

பிரதேச மீனவரின் முறுகலால் ‘ஜனாதிபதியுடன் வருவோம்’ என மிரட்டிச் சென்றனர்

இறுதியுத்தம் நடந்த பகுதிகளில் ஒன்றான புதுமாத்தளனில் குடியேறி அப்பகுதி கடலில்  மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக நேற்று (29.01.13) தெற்கிலிருந்து ஒரு பகுதி சிங்கள மீனவர்கள் தமது குடும்பங்கள் சகிதம் சென்று சேர்ந்தனர். இதனால் புதுமாத்தளன் பகுதி மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

ஏற்பட்ட முறுகல் நிலையினையடுத்து  ‘எதிர்வரும் 3ம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் வருகை தந்து  குடியேறி அப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோம்’ என்று கூறி குறித்த சிங்கள மீனவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் காரணமாக பலத்த இழப்புக்களுக்கு முகம் கொடுத்த புதுமாத்தளன் பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

சிங்கள மீனவர்கள் தம்மால் எடுத்துச் செல்லப்பட்ட படகுகள் மற்றும் பொருட்களை அப்பகுதிகளிலுள்ள படைமுகாம்களில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகின்றது. புது மாத்தளானுக்கு அருகாகவுள்ள இரணைப்பாலை கடல் வழி தொடர்பற்ற் பகுதியாகும். சுமார் 350 இற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் அருகாகவுள்ள புது மாத்தளான் பகுதி கரைப்பகுதிகிளிலேயே தொழில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஏற்கனவே யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த இப்பகுதி மக்கள் தற்போதே மீள இயல்பு வாழ்விற்கு திரும்பிவருகின்றனர். இராணுவத்தின் கடுமையான கண்காணிப்புக்களும் கட்டுப்பாடுகளும் காணப்படும் நிலையில் இந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தொழில் இல்லாமல் தவிக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதுமாத்தளான் பகுதிகிளில் மிக அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சிங்கள மீனவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இறுதியுத்தம் நடந்த பகுதிகயில் வாகனங்கள், இரும்பு முதலிய உலோகங்களை மீட்க தெற்கிலிருந்து வியாபாரிகள் படையெடுத்த நிலையில் இப்பொழுது தெற்கு மீனவவர்களும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

யுத்தம் முடிந்து சில நாதட்களிலேயே முல்லைத்தீவு நகரம் முதல் கொக்கிளாய் வரை சிங்கள மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதனால் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்பொழுது புதுமாத்தளன் வரை சிங்கள மீனவர்களின் அத்துமீறல் நீண்டிருப்பதாக மக்கள் விசனம் கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.