அமெரிக்காவில் துப்பாக்கி லைசென்ஸ் வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பங்கள் அதிகரித்து வருகின்றன, எனவே லைசென்ஸ் விதிகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கி லைசென்ஸ் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குருத்வாரா அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த ஓக் கிரீக் மற்றும் பள்ளியில் தாக்குதல் நடைபெற்ற நியூ டவுன் பகுதிகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் உள்பட அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக நாட்டில் புழக்கத்தில் உள்ள துப்பாக்கிகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மிகுந்த வேதனையளிப்பவை, இதைக் கருத்தில் கொண்டு அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படுகிறது.
துப்பாக்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவதில் விதிகளைக் கடுமையாக்குவதற்கான சட்டம் இயற்றும் போது அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் மிகவும் அவசியம்.
மிகவும் முக்கியமான இந்த விஷயத்தில் அவர்களின் ஒப்புதல் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.