உயிர்வரை இனித்தாய் யாழ் ராஜா திரையரங்கில் மூன்று நாட்களும் இலவசம்
வல்வைக் கலைஞர்களின் திரைப்படம் யாழ். திரையரங்கில்..
வல்வையில் இருந்து 18.03.2017 சனிக்கிழமை காலை இலவச பேருந்து புறப்படும், முன் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை.
இதற்கான தொலைபேசி இலக்கம் :
எதிர்வரும் 18.03.2017 சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களும் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் அப்ரோ டெஜி வழங்கும் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் காண்பிக்கப்பட இருக்கிறது.
இது வல்வை கலைஞர்களின் திரைப்படம் ரியூப் தமிழ் தயாரிப்பில் கி.செல்லத்துரை இயக்கத்தில் வஸந்த் – நர்வினி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை இப்படத்தில் முக்கிய பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
காலை 10.30, 2.30, 6.30 ஆகிய மூன்று காட்சிகள் தினசரி காண்பிக்கப்படுகின்றன, காட்சிகள் மூன்று தினங்கள் மட்டுமே, ஆனால் மூன்று தினங்களுமே இலவசம்.
இதற்கான விளம்பரப் போஸ்டல்களை யாழ். குடாநாடு முழுவதும் ஒட்டும் பணிகள் நேற்றும் இன்றும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான பணியை ரியூப்தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர், நமக்கான சினிமாவுக்கான புதிய பாதையை அமைக்க களமிறங்கியுள்ளனர் ரியூப் தமிழ் இளைஞர்கள்.
வல்வையில் இருந்து பருத்தித்துறை, நெல்லியடி, வல்லை அச்சுவேலி வழியான ஓர் அணியும், தொண்டைமானாறு வழியாக யாழ் நோக்கி இன்னொரு அணியும் புறப்பட்டனர்.
நமது சினிமாவை நாமே முன்னெடுக்க வேண்டும் என்ற புதிய வேகம் இப்போது யாழ்ப்பாணத்தில் புது வீறு பெற்றுள்ளதன் அடையாளமே இதுவாகும்.
இலங்கை, டென்மார்க், இந்தியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து கலைஞர்கள் கூட்டாக இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்துள்ளமை இந்த வேகத்தின் இன்னொரு பக்கமாகும்.
நாற்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் களத்தில் இறங்கி நமது திரைப்படம் ஒன்றுக்கான போஸ்டல்களை ஒட்டுவது மகத்தான மாற்றம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பதினொரு விருதுகளை வென்ற திரைப்படமாகும்..
இந்தியா உட்பட உலகின் பல நாடு;களில் காண்பிக்கப்பட்டு இப்போது இலங்கையில் திரையிடப்படுகிறது.
அனைத்து வல்வை வாழ் மக்களும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்..