இது சாதாரண பூனையல்ல. அதன் நடையைப் பார்த்தாலே புரியும் என்ன? உலகின் மிக உயரமான பூனையார் இவர் தான். (வீடுகளில் வளர்க்கும்) இந்தப் பூனை 18.07 அங்குலம் உயரமும் 42.72 அங்குலம் நீளமும் கொண்டது.
தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இந்தப் பூனை 2011 கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கடந்த வருட இறுதியில் கின்னஸ் சாதனைப் புத்தக மேலதிகப் பதிப்பு வெளியானது. இதில் உலகின் உயரமான பூனை, வயதான பூனை, உயரமான நாய், மிகச் சிறிய நாய்…. என பல்வேறு மிருகங்களின் சாதனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.