அண்டார்டிகா ஐஸ் கட்டிக்குள் மறைந்து கிடந்த ஏரி கண்டுபிடிப்பு

அண்டார்டிகா பனி பிரதேசத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் முகாம் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது படர்ந்து கிடக்கும் ஐஸ் கட்டியின் அடியில் மறைந்து கிடக்கும் ஏரிகளை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ரோஸ் கடல் பகுதியில் ஐஸ் கட்டிகளின் மீது துளை போடும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அப்போது 1 கி.மீட்டர் ஆழத்தில் ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வில்லர்னஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது துளை போடும் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் தெரிய வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவினர் ஐஸ் கட்டிக்குள் மறைந்து கிடந்த எல்ஸ்வொர்த் என்ற ஏரியை கண்டுபிடித்தனர். வோஸ்டாக் என்ற இடத்தில் ரஷியா ஏரியை கண்டுபிடித்தது. ஆனால் அதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.