Search

வல்வை வி.க உதைபந்தாட்ட- இன்றைய போட்டியில் 05.03.2017 கலைமதி வி.க மற்றும் இமையாணன் மத்தி வி.க வெற்றியை தமதாக்கிக் கொண்டது

வல்வை வி.க உதைபந்தாட்ட- இன்றைய போட்டியில் 05.03.2017 கலைமதி வி.க மற்றும் இமையாணன் மத்தி வி.க வெற்றியை தமதாக்கிக் கொண்டது

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்

இன்று நடைபெற்ற முதலாவது சுற்றில் கலட்டி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 6:1 என்ற கோல் கணக்கில் கலைமதி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

இரண்டாவதhக நடைபெற்ற ஆட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 3:2 என்ற கோல் கணக்கில் இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.                            




Leave a Reply

Your email address will not be published.