ஒரே நாள் – ஒரே இடம் 4 பெண்கள் இரட்டை குழந்தை பெற்ற அதிசயம்

இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரே நாளில் நான்கு பெண்மணிகள் இரட்டைக்குழந்தைகளை பிரசவித்த சுவாரஸ்யமான  சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள நஹாரியா நகரத்தில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது.

இந்த மருத்துவமனையில்,நேற்று நான்கு பெண்மணிகளுக்கு அடுத்தடுத்த மணித்துளிகளில் நடைபெற்ற பிரசவத்தில், நான்கு பேரும் இரட்டைக்குழந்தைகளை பிரசவித்தனர்.நால்வரும் வெவ்வேறு மதங்களைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..இந்த பிரசவம் குறித்து அந்த மருத்துவமனை  நிர்வாகி  கூறுகையில் வாழ்க்கை எல்லோரும் பொதுவானது என்பதை இந்த பிரசவங்கள்  உணர்த்துவதாக தெரிவித்தார். மேலும், இந்த மருத்துவமனையில் சென்ற வருடம் 125 இரட்டைப் பிரசவங்கள் நடைபெற்றதாகவும் மருத்துவமனை நிர்வாகி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.