இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசு மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துவதாக சட்டசபையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் முதலாவது தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் பாக்ஜசலசந்தி கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் அந்நாடுட்டன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்து வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். தமிழர்களை இனப்படுகொலை செய்யும் விவகாரத்தை இந்திய அரசு சர்வதேசத்தின் முன்பு எடுத்து வைக்க வேண்டும்.