பல்வேறு வசதிகளை தம்மகத்தே கொண்டு மக்கள் மத்தியில் விரைவாக பிரபல்யமைடைந்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிகளினை தொடர்ந்து முற்று முழுதாக ஒளி ஊடுபுகவிடக்கூடிய (Transparent) அதிரடி தொழில்நுட்பத்தினை உட்புகுத்தி புதிய ஸ்மார் கைப்பேசிகள் அறிமுகமாகவுள்ளன.
தாய்வானை தளமாகக்கொண்டு செயற்படும் Polytron எனப்படும் நிறுவனமானது இப்புதிய தொழில்நுட்பத்தினை உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்துகின்றது.
2013ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசிகளில் தாய்ப்பலகை (Mother Board), மெமரி கார்ட், மற்றும் கமெரா ஆகிய துணைச்சாதனங்கள் மட்டுமே கண்ணுக்கு புலப்படக்கூடியதாகக் காணப்படும் எனவும் ஏனைய பகுதிகள் முற்றுமுழுதாக விசேட கண்ணாடியினால் ஆனது எனவும் Polytron நிறுவனம் தெரிவித்துள்ளது.