இப்போதெல்லாம் கனடாவில் பொது தொண்டுகளிற்காக நிதி சேகரிப்பதற்காக பலவித புதுப்புது நிகழ்ச்சிகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இந்த வகையில் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிக்ரன் என்னும் இடத்தில் குளிரால் உறைந்திருந்த ஆற்றுக்குள் துளை போட்டு மீன் பிடிக்கும் போட்டியொன்று இடம்பெற்றது.
குறிப்பாக குளிர் காலத்தில் இவ்வாறு உறைந்த பனியில் நடந்து சென்று ஆற்றின் மத்தியில் துளைபோட்டே மீன் பிடிப்பது வழக்கமாயினும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மேலாடையேதுமின்றி கலந்து கொண்டதே இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
அன்று ஏதோ வர்ணபகவானின் துணையால் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழே 8 பாகையாக இருந்தாலும் அதுகூட தாங்கமுடியாத ஒரு குளிராகும். எனினும் இந்த இலக்கமே கீழ்நோக்கி இரட்டை இலக்கங்களாகச் சென்றால் அந்தக் குளிரைப்பற்றிக் பேசவே தேவையில்லை.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதுடன் அந்த நகரில் உள்ள சிறார்களின் ஊக்க அமைப்பு ஒன்றிற்காக ஆயிரத்து ஐநாறு டொலர்களையும் சேர்த்துக் கொடுத்துள்ளனர்.