இலண்டனில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள பிரதிநிதிகள் கூட்டத்தில் அர்ஜெண்டினா கலந்து கொள்ளாது என்று அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலண்டனில் அடுத்தவாரம் ஃபாக்லாந்து பிரதிநிதிகளும் அர்ஜெண்டினா பிரதிநிதிகளும் கூடி ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.
அர்ஜெண்டினா சார்பில் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று அர்ஜெண்டினாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெக்ட்டார் டிமெர்மன்(Hector Timerman) தெரிவித்தார்.
ஃபாக்லாந்தை, அர்ஜெண்டினா தனக்குச் சொந்தமான தீவாகக் கருதி வருகிறது.
ஃபாக்லாந்து தீவில் 3000 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனி நாடாக இருக்க விரும்புகின்றனரா அல்லது அர்ஜெண்டினாவுடன் இணைய விரும்புகின்றனரா என்பதை அறிய வரும் மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
மேலும் இந்த தீவுகள் குறித்து ஹெக்ட்டார், முப்பதாண்டுகளுக்கு முன்பு ஃபாக்லாந்து தீவு அர்ஜெண்டினாவுக்கு சொந்தமானது.
இதற்கிடையில் பிரிட்டிஷ் படைகளுடன் போரிட்டதில் 74 நாட்களுக்கு பின்பு மீண்டும் எங்களுக்கு இத்தீவு சொந்தமானது.
இந்நிலையில் இத்தீவை எங்களிடம் ஒப்படைக்காமல், இலண்டனில் பிரிட்டிஷார் முன்னிலையில் கூட்டம் நடத்தினால் அதில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கூறினார்.