இலங்கையில் அமைதியீனத்தையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்தவே புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பாடுபடுகின்றனர்; கெஹலிய

இலங்கையில் அமைதியீனத்தையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்தவே புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பாடுபடுகின்றனர்; கெஹலிய

இலங்கையில் அமைதியின்மையினையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கும் புலம் பெயர் புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள் சிக்கிவிட்டனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு நேற்று  தகவல் ஊடகத்றை அமைச்சில் நடைபெற்றது அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட புலிகள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து தமது நிகழ்ச்சி நிரலின்படி இன்றுவரை செயற்பட்டுக் கொண்டுருக்கின்றனர்.

இலங்கையின் சிறு தவறுகளைத் தூக்கிப்பிடித்து அவற்றை சர்வதேச அரசியல்மயப்படுத்தி இலங்கையில் அமைதியின்மை ஏற்படுத்தவும் பிரிவினைக்கு வழிவகுக்கவும் தூபமிடுகின்றனர்.

நிதி வசூலிப்பு மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி வெளிநாட்டு அரசியல்வாதிகளை தமது வலையில் சிக்கவைத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

எனினும் நாம் 30 வருட கால கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுடன்  மனச்சாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடனும் பொறுமையுடனும் செயலாற்றி வருகிறோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.