யாழ் நகரில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா : சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கிறார்

யாழ் நகரில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா : சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கிறார்

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஞானம் அறக்கட்டளையின் வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வருகிறார்.

போருக்குப் பின்னரும் முகாம்களில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்காக லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை 150 வீடுகளை நிர்மாணித்து இலவசமாக கையளிக்க உள்ளது. ஞானம் அறக்கட்டளை. லைக்கா நிறுவனத்திக் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையாகும்.

தமிழ்ர்களுக்காக ஞானம் அறக்கட்டளை வவுனியா சின்ன அடம்பன் மற்றும் புளியங்க்குளம் ஆகிய பகுதிகளில் வீடுகளை நிர்மாணித்துள்ளது.

நிர்மாணிக்கப்படுள்ள இப் புதிய வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் விசேட விழா யாழ்ப்பாணதில் அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடைபெறுகிறது. இன் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் கலந்துகொள்கிறார். ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்ட வீடுகளை சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தன் கைகளால் வழங்கி வைக்க இருக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்கான இந்த நிகழ்ச்சியில் தான் சமூகமளிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார், இத்தைய நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வட மாகாண முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், மலேசிய சென்ட் தலைவர் எஸ். விக்னேஸ்வரன், பிரிட்டனின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜேம்ஸ்பரி, மற்றும் ஜஸ்டிஸ்கமிட்டி உறுப்பினர் திரு .கீத்வாஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.