கேரளாவை கலக்கும் மின்சார மனிதன்: அசத்தல் காணொளி இணைப்பு

அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி (History) தொலைக்காட்சி இந்தியாவிலுள்ள அதிசய மனிதர் ஒருவரை கண்டுபிடித்துள்ளது.

இந்தியா, கொல்லம் என்னும் பகுதியை சேர்ந்த ராஜ் மோகன் ஜயர் என்பரே இந்த அதிசய மனிதராவார்.

இவரை “மின்சார மோகன்” என எல்லோரும் செல்லமாக அழைக்கிறார்கள்.

இவரது உடம்பில் எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும், அவரை எதுவும் செய்வதில்லை.

மோகன் தன்மீது 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார். ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை.

சாதாரண மனிதர்களாயின் சுமார் இரண்டு நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.

இவரின் அபார திறமையை கேள்விப்பட்ட ஹிஸ்ரி தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான டானியல், மோகனை ஆய்வுக்குட்படுத்துகிறார்.

முதலில் குறைந்தளவான வோல்டேஜ் மின்சாரம் அவரில் பாய்ச்சப்படுகிறது. இதன் மூலம் மின்குமிழை ஒளிர செய்கிறார்.

அடுத்த படியாக 200-300 வோல்டேஸ்சில் இயங்கக் கூடிய இயந்திரத்தை இயக்க வைக்கிறார்.

இவருக்குள் எப்படி இப்படியான சக்தி என்று யாவரும் வியக்க,

இது குறித்து மோகன் சொல்கிறார்,

எனது தயாரார் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணினேன். இதற்காக மின்சாரத்தை பயன்படுத்தினேன். இதன் போது தான் எனக்குள் இவ்வாறான அபூர்வ சக்தி இருப்பதை அறிந்து கொண்டேன். கடவுள் தனக்கு கொடுத்த கொடை என விழிக்கிறார் இவர்.

எச்சரிக்கை: இவர் முயற்சிப்பது போன்று எவரும் முயற்சிக்க கூடாது. உயிரை பறிக்கும் ஆபத்தானவை.

Leave a Reply

Your email address will not be published.