முன்னணி இலத்திரனியல் சாதனங்களை தயாரித்து வழங்கும் நிறுவனமான LG ஆனது இரண்டு சிம்களை பயன்படுத்தும் வசதியை உள்ளடக்கிய Optimus L7 எனும் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படவல்ல இக்கைப்பேசிகள் 1GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor – இனையும் கொண்டுள்ளதுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.
இவற்றின் தொடுதிரையானது 4.3 அங்குல அளவுடையதாகவும், IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. மேலும் இவற்றின் பெறுமதியானது 432 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.