பிரிட்டன் பிரஜையான கென் வில் மென் என்பவர் கடற்கரையோரம் தன் நாயுடன் நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது கரையோரத்தில் தேங்காய் பருமன் கொண்ட ஒரு பொருளை நாய் மோப்பம் பிடித்தது.
கென் கண்டுகொள்ளாமல் சென்றாலும் உடன் வந்த நாய் அந்த பொருளை விட்டபாடில்லை.
எனவே குறித்த அந்த பொருளை எடுத்த கென், அதை ஆராய்ந்த போது திமிங்கலத்தின் “வாந்தி” என அறிந்து கொண்டார்.
அதாவது, உணவு செறிமானம் ஆகாத சில நேரங்களில் திமிங்கலங்கள் எடுத்த வாந்தி, அப்படியே திடப்பொருளாக மாறி மிதந்து கரை ஒதுங்குமாம்.
இது, வாசனை திரவியம் தயாரிக்க மிகவும் பயன்படக்கூடிய பொருள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர் 50,000 யுரோவுக்கு குறித்த அந்த பொருளை வாங்க உள்ளார்.
இருப்பினும் இதன் உண்மையான விலை தெரிந்து கொண்ட பின்னரே, விற்கப்போவதாக கென் தெரிவித்துள்ளார்.