அமெரிக்காவில் உள்ள தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தொடர்ந்து சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகி உள்ளது.
அமெரிக்காவில் இருந்து செயல்படும் தி நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை சீனாவின் பிரதமர் வென் ஜெய்போவின் குடும்பம் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து புலனாய்வு மேற்கொண்டது.
இதனை தெரிந்துகொண்ட சீனா, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இணையதளம் மற்றும் அவர்களது 60 கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவி அவர்களுது மின்னஞ்சல் கணக்குகளுக்குள் உள்ள தகவல்களை திருடி உள்ளனர்.
அதுவும் குறிப்பாக சீனாவின் பிரதமர் வென் ஜெய்போ குறித்து விசாரித்துவரும் நிருபர்களின் மின்னஞ்சல் கணக்குகளை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
எனவே இந்த ஊடுருவலுக்கு பின்னால் சீனா இராணுவம் உள்ளதாகவும், சீனா அரசுதான் இந்த ஊடுருவலுக்கு பொறுப்பு எனவும் தெரியவந்துள்ளது.