வல்வை தீருவில் பகுதியில் கி.முத்துவேலின் வயலில் நெல் விளைந்தது வல்வையில் என்ன வளம் இல்லை என்பதற்கு இணங்க விளைவித்து காட்டியுள்ளார்
இது வல்வை தீருவில் வயலூர் முருகன் ஆலயத்திற்கு பின் வீதியில் உள்ள வயல் காணியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டிருந்தது.
இவ்வயலூக்குரிய நீரினை வல்வை தீருவில் குளத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது
மேலூம் இக்குளத்தினை ஆளப்படுத்தி நீரினை சேமித்து வைப்பதன் மூலம் பெருமளவான நெல் உற்பத்திகளை விவசாயிகள் மேற்கொள்வதற்கு நூற்றுக்கு நூறு வீதம் முக்கியத்துவம் உள்ள காரணிகளாக அமையும்
இக்குளமானது கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை நகர சபை world food programme நிறுவனத்தின் ஊடாக இக்குளத்தினை ஆழப்படுத்தி பெருமளவான நீரினை சேமித்து வைப்பதற்கான வேலைத்திட்டத்தினை முடித்திருந்தது