Search

கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி 08.04.2017 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற கணபதி பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 08.04.2017 (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி;மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கணபதி பாலர் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை திருமதி. வத்ஸ்சலா பிறேமராசா அவர்களும் மற்றும் கௌரவ விருந்தினராக கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவர் திரு.தி.நாகேஸ்வரன் ஜயா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *