65 ஆவது தேசிய சுதந்திரதினம் திருகோண மலை நகரில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கொழும்பிலிருந்தும் மற்றும் பதினைந்து நகரங்களிலிருந்தும் திருகோண மலைக்கு விசேட ரயில் பஸ்சேவைகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 6.10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் கூடுதல் பெட்டிகளுடன் விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுகின்றன. இவ்விசேட ரயில், பஸ் சேவைகள் பெப்ரவரி 25 ஆம் திகதிவரை நடத்தப்படும் என்றும் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, திருகோணமலை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒழுங்கைகளிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரிலுள்ள ஒவ்வொரு ஒழுங்கையின் நுழைவாயிலிலும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கு இடமானவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அதேவேளயில் சுதந்திர தினத்திற்கான முப்படை அணிவகுப்பின் ஒத்திகையும் நேற்று இடம்பெற்றது.







