இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் பத்தொன்பது வயதிற்குற்பட்ட
ஆண்களுக்காக இறுதி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்திற்கும்
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் நடைபெற்றது. இவ் இறுதியாட்டத்தில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
உதைபந்தாட்ட தொடரின் தொடர் ஆட்டநாயகன் விருது, வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த குமரன் அவர்களுக்கும், வளர்ந்து வரும் வீரருக்கான விருது இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த கபிலன் அவர்களுக்கும்,
மற்றும் இறுதியாட்ட நாயகன் விருது, வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த ராஜேந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது