பிரான்ஸ் வான் படைகள், மாலியின் பாலைவனப் பகுதியில் செயற்பட்ட தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை தாக்குதல்கள் நடித்தி தரைமட்டமாக்கின.
பிரான்ஸ் ஜனாதிபதி பிராங் கோயிஸ் ஹாலண்ட், மாலிக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள பாலைவனப் பகுதியான கிடல் அருகே இயங்கிய தீவிவாத பயிற்சி மையத்தை பிரான்ஸ் நாட்டின் 30 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கின.
இது குறித்து பிரான்ஸ் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், மாலியில் இயங்கிய தீவிரவாத அமைப்பு கடந்த 10 மாதங்களாக சில பகுதிகளை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தது.
தற்போது அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டு அப்பகுதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.







