வேங்கைப் பெண் செங்கொடியே!
தமிழர் நெஞ்சங்களில் படர்ந்த செங்கொடியே!
மரண தண்டனைக்கு எதிராக தீயில்
மூண்ட தியாகச் சுடர் செங்கொடியே!
விடுதலைக்காவும்
இன் உயிரை இரையாக்கிய
தியாகத்தின் தீரம் செங்கொடியே!
நீ மானிடத்தின் வரலாற்றில்
கறை படிந்த பக்கங்களுடன்
பாரத தேசத்தின் இனப்படுகொலைகளுக்கான தீர்ப்பும்
பழிவாங்கலும் ஒன்றகிவிட்டது!
என்று உணர்ந்த தமிழினத்தின் தியாகச் செம்மல்
எமது சகோதரியே நீ உன்னை வேள்வித் தீயில் தீயாக்கி
தியாகி முத்துக்குமாரனின் வரிசையில்
உன் உன்னதத் தியாங்களுடன்
உன் தியாகங்களும் வீண் போகாது
நாளை மலரும் எம் தமிழீழம் உன் நினைவும் எம்முள் மிளிரும் !
எம் தேசத்தின் விடுதலைக்காய்
தம் இன் உயிர்களை விதையாக்கிய
எம் மாவீரர்கள் துயிலும் இல்லங்களில்
நீயும் ஒர் நடுகல்லாய் நிமிர்ந்து நிற்ப்பாய் !
தர்மத்தின் மீதும் தியாகங்களின் மீதும் நடந்து செல்லும்
எமது விடுதலைப் பயணம் நிச்சயம் வெற்றி பெறும்
உன் உயிர் மீது நாம் உறுதி எடுக்கிறோம் !
தமிழக உறவுகளே நீங்கள் உங்களின்
உயிர்த்தியாகங்களின் ஊடாகவும்
சட்டசபை தேர்வினுடாகவும்
வாழ்வியலுக்கு வலுவான தீர்ப்பு வழங்கி
உங்களின் நியாயத் தன்மையினையும்
விடுதலை உணர்வையும் இந்த சர்வதேசதிற்க்கு
உங்களின் அதியுயர் தியாகங்களினூடாக உறுதி செய்து விட்டீர்கள்
அதுவே தமிழரின் தாகம் தனித் தமிழீழத் தாயகம் !