வடிவமைப்பு (format) எதுவும் செய்யாமல் ஏற்கனவே விண்டோஸ் 7 நிறுவி உள்ள ஒரு கணணிக்கு புதிதாக வெளியான விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவ ஆசைப்படுகின்றீர்களா? அதற்கு இலகுவான ஒரு வழி உங்கள் கணணிக்கு Dual-Boot அமைத்து இரு ஒபெரடிங் சிஸ்டங்களையும் ஒரே கணணியில் நிறுவி பயன்படுத்தலாம். எவ்வாறு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்கலுக்கு Dual-Boot அமைப்பது என்று இனி பார்ப்போம்.
விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் பயன்படுத்தும் 60 GB நிலைவட்டு (Hard Disk) இடத்தில் தர்க்கரீதியாக 20 GB இடத்தை விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவ பயபடுத்தி கொள்ளலாம். அதற்கு நிலைவட்டில் புதிய பகிர்வை (Partition) உருவாக்குதல் வேண்டும். இதை Disk management MMC snap -inஉதவியோடு உருவாக்கி கொள்ளலாம். Windows + R யை அழுத்தி Run பாக்ஸ்யை திறந்து, அங்கே diskmgmt.msc என்று குறியுங்கள்.
தொடர்ந்து Enter யை அழுத்துங்கள் அல்லது OK என்பதை கிளிக் செய்யுங்கள். அதை தொடர்ந்து MMC ஆனது Disk management snap -in உடன் இயங்கும், அங்கே உங்கள் நிலைவட்டின் உடைய ஒரு கண்ணோட்டத்தை பார்ப்பீர்கள்.
தொடர்ந்து, உங்கள் கணணி C: டிரைவ்வுக்கு shrink அமைப்பதன் மூலம் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்துக்கு நிறுவ தேவையான கொள்ளளவை (Capacity) உருவாக்கி கொள்ளுதல் வேண்டும். shrink அமைப்பதற்கு நிலைவட்டில் காணப்படும் C: டிரைவ்வில் ரைட் கிளிக் செய்து, அதில் “shrink Volume” என்பதை தெரிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.
அதை தொடர்ந்து C: டிரைவ்வுக்கு நீங்கள் எவ்வளவு megabytes யில் shrinkஅமைக்க போகின்றீர்கள் என்ற தகவல் பெட்டி (Dialog Box) தோன்றும். இங்கே1024 megabytes ஒரு gigabytes யை குறிக்கும், ஆகவே உங்களுக்கு தேவையான 20 GB அமைத்துக்கொள்ள 20480 megabytes தேவைப்படும். (20 * 1024 = 20480 megabytes)
பின்னர் கிழே காணப்படும் shrink பொத்தானை அழுத்துவதன் மூலம் விண்டோஸ் உங்கள் C: டிரைவ் வை shrink செய்துகொள்ளும். shrinking ஆனது உங்களுடைய C: டிரைவ் வின் பகிர்வை (Partition) முடித்த பின்பு, Disk Management ஆனது புதிய இடத்துடம் empty Partition னாக தோன்றும். அந்த புதிய டிரைவ் வை file system த்துடன் format செய்வதற்கு, கறுத்த இடத்தில் ரைட் கிளிக் செய்து அங்கே “New Simple Volume ” என்பதை தெரிவு செய்க.
அடுத்து, குறித்த டிரைவ் வை format செய்வதற்கான படிமுறைகளுடன் ஒருwizard தோன்றும். பின்னர் அங்கே simple volume space யில் காட்டப்படும் எண்ணையே (20479) மாற்றங்கள் எதுவும் செய்யாமல் “Next ” யை அழுத்துங்கள்.