தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை – எம்.கே. சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு இன்னமும் இலங்கையில் சுதந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரிய சுதந்திரம் கிடைக்கவில்லை எனவும் இதனால் தமிழ் மக்கள் இன்றைய சுதந்திர தினத்தை கொண்டாட முடிhயத நிலையில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சுமார் ஒரு மில்லியன் தமிழர்களின் வாக்குறுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் இரண்டாம்நிலைப் பிரஜைகளாக கருதப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் முற்று முழுதாக நீக்கப்பட்டால் மட்டுமே தமிழ் மக்கள் முழுமையான சுதந்திரத்தை இலங்கையில் அனுபவிக்க முடியும் என எம்.கே. சிவாலிஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *