அரிசோனா பாலைவானத்தில் மர்ம உருண்டைகள்: வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவையா?
அரிசோனா பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம உருண்டைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
அப்பகுதிக்குவிஜயம் செய்த ஜெரடைன் வெர்காஸ் என்ற பெண்மணியே இவற்றைக் கண்டுள்ளார்.
ஊதா நிறமான இவை பார்ப்பதற்கு பளிங்கு உருண்டைகள் போல காட்சியளித்ததாகவும் அவற்றை பிழியும் போது நீர்போன்ற திரவம் அதனுள்ளிருந்து வெளியாகியதாகவும் ஜெரடைன் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளதுடன் இவை தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கிடையில் இவை வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இவுயிரினத்தின் பெயர் ஜெலி பங்கஸ் என தாவரவியல் நிபுணவரொருவர் தெரிவித்துள்ளார்.