தமிழர்களுக்கான சுயாட்சியை இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.
தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் தாம் மனதில் ஒரு தீர்வை கொண்டிருப்பதாக 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அனைவருக்கும் சமஉரிமை என்ற அடிப்படையில் அந்ததீர்வை விரைவில் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் வித்தியாசமான சமூகங்கள் வாழும் வடக்கில், இன அடிப்படையில் சமய அடிப்படையில் தமிழர்களுக்கு சுயஆட்சியை ஏற்படுத்த முடியாது என்று ஜனாதிபதி தற்போது கூறியுள்ளதாக த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இன அடிப்படையில் வித்தியாசமான நிர்வாகங்களை நடத்த முடியாது.
எனவே இனப்பிரச்சினைக்கு அனைத்து இனங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படுதேயாகும் என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.